மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி

72பார்த்தது
மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி
திருப்பூர் ராக்கியாபாளையம் பட்டத்தரசி அம் மன் கோவில் வீதியைச் சேர்ந்த மாதவன் மகன் சந்தோஷ் (வயது 18). இவர் நல்லூர் பகுதியில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் உணவு இடைவேளையில் மோட்டார்சைக்கிளில் சாலையில் சென்று கொண்டிருந்த போது நல் லூர் அருகே சாலையின் நடுவில் வைத்தி ருந்த மைய தடுப்பு சுவரில் (டிவைடர்) எதிர் பாராத விதமாக மோதி கீழே விழுந்துள்ளார். இதில் சந்தோஷ் தலை மற்றும் கை, கால் களில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நல்லூர் போலீ சார் சந்தோசின் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

டேக்ஸ் :