நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'தி கோட்' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி உள்ளது. திருப்பூர் மாநகரில் மட்டும் 60 திரையரங்குகளில் காலை 9 மணிக்கு படம் வெளியாகி உள்ளது. படத்தை காண ஏராளமான ரசிகர்கள் முன்பதிவு செய்து இருந்த நிலையில் எட்டு மணி முதலே திரையரங்குகளின் முன்பாக கூடிய ரசிகர்கள் மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். இன்று(செப்.4) முதல் நாள் காட்சிக்கு அனைத்து திரையரங்கிலும் டிக்கெட் விற்பனை முடிவடைந்துள்ளது.