கொமரலிங்கம் அருகே திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

78பார்த்தது
கொமரலிங்கம் அருகே திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே பெருமாள் புதூர் ஆவின் பாலகத்தில் கடந்த 22 ஆம் தேதி மர்ம நபர்கள் ஆவின் பாலகத்தின் பூட்டை உடைத்து அங்கிருந்து தங்க நகை மற்றும் பணத்தை திருடி சென்று விட்டனர். இது குறித்து உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்ட கொமரலிங்கம் காவல்துறையினர் இன்று ஆணைமலை பகுதியைச் சேர்ந்த, மணிகண்டன் மற்றும் கௌதம் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர்கள் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி