தோட்டத்தில் தூக்கில் தொங்கிய கணவர் - மனைவி அதிர்ச்சி

10404பார்த்தது
தோட்டத்தில் தூக்கில் தொங்கிய கணவர் - மனைவி அதிர்ச்சி
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே வெங்கிட்டாபுரத்தில், வஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர், இன்று காலை அவரது தோட்டத்திற்கு சென்றவர் திரும்பி வராததால் மனைவி சுபா அவரைத் தேடி தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு ஆனந்தகுமார் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்துள்ளார். அவரை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தகவல் கிடைத்ததும் விரைந்து சென்ற கணியூர் காவல் துறையினர் சுபா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி