நால்ரோட்டில் சாலை மறியல் செய்து பொதுமக்கள் போராட்டம்

3320பார்த்தது
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த பரஞ்சேர்வழி நால்ரோட்டில் நேற்று காலை சுமார் 10 மணி அளவில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நால்ரோட்டிலிருந்து நத்தகாடையூர் செல்லும் சாலையில் பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதாகக் கூறி தனியார் நிறுவனம் மீது எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காங்கேயம்- சென்னிமலை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து உடனடியாக காங்கேயம் போலிசார் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர். பொதுமக்கள் சார்பில் அந்த தனியார் நிறுவனத்தின்‌ மீது மனு அளித்தனர். பின்னர் பொதுமக்களுடன் போலிசார் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு அனைவரும் கலைந்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி