காங்கேயத்தில் விவசாய நிலத்தில் தட்டை அறுவடை பணி துவக்கம்

552பார்த்தது
காங்கேயத்தில் விவசாய நிலத்தில் தட்டை அறுவடை பணி துவக்கம்
காங்கேயம்‌ பகுதிகளில் விவசாய நிலத்தில் தட்டை அறுவடை பணி துவக்கம்

பொதுவாக விவசாய‌ நிலங்களில் நெல், சோளம், ஊடு பயிர்கள், மானாவரி பயிர்கள் பயிரிட்டு அறுவடை செய்வதை அடுத்து சில தரிசு நிலங்களில் தட்டை புற்கள் ஆனி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உஷ்ன காலத்தில் அறுவடைக்கு பயிரிடுவது வழக்கம்.
கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு இது போன்ற தட்டை புற்களை வளர்த்து அறுவடை செய்தும் தீவனத்திற்கு விற்பனை செய்தும் வருகின்றனர். ஏக்கருக்கு 100 முதல் 150 தட்டை புற்கள் கட்டுகள் அறுவடை செய்யப்படுகிறது‌. இந்த பயிரின் காலம் 3 மாதங்கள் ஆகும். ஆனி மாதத்திற்கு பிறகு சுமார் 3 மாதங்கள் முடிய மிதமான சீதோஷ்ண நிலை உள்ளதால், தட்டை புற்கள் வளர்ச்சி திறன் அதிகமாகவே இருக்கும். தை மாதத்துக்குப் பிறகு கோடை காலம் துவங்குவதால் தை மாத பொங்கல் பண்டிகைக்கு முன்பு இந்த தட்டை புற்கள் அறுவடை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது காங்கேயம் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கால்நடை தீவனத்திற்காக தட்டை புற்கள் அறுவடை செய்யும் பணி துவங்கியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி