காங்கேயத்தில் வெளிமாநில கார்களை வாடகைக்கு ஓட்டுவதாக புகார்

8042பார்த்தது
வாடகைக்கு இயக்கப்படும் கார்களுக்கும் சொந்த பயன்பாட்டிற்கு உள்ள கார்ளின் காப்பீடு, தகுதிச்சான்று (FC), சாலைவரிகள் ஆகியவைகளில் செலுத்தும் தொகை வித்தியாசம் இருக்கும். சொந்த பயன்பாட்டிற்கு வாங்கிய கார், ஜீப் போன்ற வாகனங்களை வைத்து நாள், மாதாந்திர, வருட வாடகைக்கு காங்கேயம் பகுதிகளில் இயக்கப்படுகின்றது.

அதுமட்டும் இல்லாமல் வெளி மாநில வாகனங்கள் தமிழ்நாட்டிற்குள் குறிப்பிட்ட நாட்கள் சுற்றுலா வர அனுமதி பெற்றுவிட்டு நிரந்திரமாக தொழில் சார்ந்து வருட கணக்கில் இங்கு ஆட்களை ஏற்றி பணிக்கு செல்லும் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதில் மேலும் அதிர்ச்சி தகவல் என்னவென்றால் அரசு சார்ந்த கான்ட்ராக்ட் பணிகளுக்கு ஆட்களை அழைத்துக்கொண்டு சென்று மாலை நேரத்தில் கூட்டிவருவதற்கும் இந்த வாகனங்களை இயக்குகின்றனர். 12 நபர்கள் செல்லக்கூடிய வேனில் 30 நபர்களையும், 9 நபர்கள் செல்லக்கூடிய ஜீப்பில் 22 நபர்களையும், 4 நபர்கள் செல்லக்கூடிய கார்களில் 7 நபர்களையும் அழைத்துச் செல்கின்றனர்.

இப்படி செல்வது உயிருக்கு ஆபத்து என்பதை காட்டிலும் சட்டவிரோதமானது. எந்த அடிப்படையில் இந்த வாகனங்கள் காங்கேயம் பகுதிகளில் இவ்வளவு நாட்களாக இயக்கப்படுகின்றது என்பது கேள்விக்குறியாக உள்ளது. தனியார் வாகன ஓட்டிகள் 4 வாகனங்களை சிறைபிடித்த பின்னர் மோட்டார் வாகன ஆய்வாளர் வாகனங்களை மீட்டு அபராதம் விதிக்கப்படும் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி