தாராபுரம்: கஞ்சா செடி வளர்த்த வடமாநில தொழிலாளர்கள் கைது!

7180பார்த்தது
தாராபுரம்: கஞ்சா செடி வளர்த்த வடமாநில தொழிலாளர்கள் கைது!
குண்டடம் அருகே தனியார் கோழிப் பண்ணையில் பணிபுரிந்து கொண்டே வாடகை வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்த வடமாநில இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்டடம் வட மாநில தொழிலாளர்கள் சில நேரங்களில் அங்கே இருக்கும் இளைஞர்கள் சிலர் போதையில் இருப்பதாகவும், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தாராபுரம் மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

புகாரின் பேரில் தாராபுரம் மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் கோவர்த்தனாம்பிகை, உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமார், சிறப்பு உதவி ஆய்வாளர் குணசேகரன், மற்றும் தலைமை காவலர் கருப்புசாமி ஆகியோர் அப்பகுதியில் பணிபுரிந்து வந்த வடமாநில இளைஞர்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் சந்தேகத்திற்கு இடமான வடமாநில தொழிலாளர்களை பிடித்து போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மேற்கு வங்காளதைச் சேர்ந்த தாரிக் முண்டால் (33), அனுப் சர்தார் (22) ஆகிய இருவரும் சேர்ந்து அங்குள்ள கோழி பண்ணையில் வேலை செய்து கொண்டு இந்த கஞ்சா செடிகளை வளர்த்து விற்பனை செய்ததது தெரியவந்தது. இதையடுதது அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 1.800 கிராம் மதிப்புள்ள 7 அடி நீளம் வளர்ந்த கஞ்சா செடியை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி