அரசு பள்ளி புதுப்பிப்பு அமைச்சர் கயல்விழி திறந்து வைத்தார்!

567பார்த்தது
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் ஓலபாளையம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் அருள்மிகு குல மாணிக்க ஈஸ்வரன் கோவில் புனரமைக்கும் பணி ஆறுமுகம் அறக்கட்டளை சார்பில் அனிதா டெக்ஸ்டைல் பிரைவேட் நிறுவனம் 35, லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது.

அரசு பள்ளி மற்றும் கோவில் புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்று அரசு நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் விழா திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில், நடைபெற்றது.

இந்நிகழ்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்

அமைச்சர் கயல்விழி கூறுகையில், மக்கள் நலத்திட்ட பணிகள் அனைத்தையும் அரசு மட்டும் தான் செய்ய வேண்டும் என்று இல்லை. அனிதா டெக்ஸ்டைல் நிறுவனங்களைப் போன்று தனியார் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் இணைந்து இதுபோன்ற மக்கள் நலத்திட்ட பணிகளை மேற்கொள்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இதுபோன்ற மக்கள் நிலத்தட்ட பணிகளை அரசுடன் இணைந்து தனியார் தொண்டு நிறுவனங்களும் முன் வருவதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டாக அமையும்

. அரசு பள்ளியையும் கோவிலையும் சிறப்பாக புனரமைப்பு பணிகளை செய்து கொடுத்த ஆறுமுகம் அறக்கட்டளை அனிதா டெக்ஸ்டைல் பிரைவேட் லிமிடெட் குலும்பு இயக்குனர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி