திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திருப்பூர் புறநகர் மாவட்ட அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் தாராபுரம் உடுமலை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளருமான தேளி. கே. காளிமுத்து தலைமை தாங்கினார். தாராபுரம் ஒன்றிய தலைவர் கணேஷ். ஒன்றிய செயலாளர் பாண்டியன். மாவட்ட இளைஞரணி செல்லப்பாண்டி. ஆகியோர் அனைவரையும் வரவேற்றார்.
தாராபுரம் ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் ஆனந்தன். வெங்கடேசன். நாகராஜ். மனோபாண்டி. இம்ரான். ரகுபதி. மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் செல்வகுமார் சீனிதேவர்.
பிரபு. செல்வம்.
சூர்யா. ஆகிய
புதிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் அவருக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி இனிப்புகள் வழங்கி வாழ்த்தினர்.
அறிமுக விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: -
மறைந்த தேமுதிக தலைவர்
விஜயகாந்த் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 5000 வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.
இந்த கூட்டத்திற்கு அவிநாசி. காங்கேயம். பல்லடம். மடத்துக்குளம். தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 300. க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.