மேல்நிலைப்பள்ளியில் உளவியல் கருத்தரங்கு

58பார்த்தது
மேல்நிலைப்பள்ளியில் உளவியல் கருத்தரங்கு
திருப்பூர் பெருமாநல்லூர் ஸ்ரீவிக்னேஸ்வரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கலைமகள் கலையரங்கில் உளவியல் கருத்த ரங்கு நடைபெற்றது. கருத்தரங்கிற்கு பள்ளி தாளாளர் முருகசாமி தலைமை தாங்கினார். முதல்வர் ராஜலட்சுமி முன்னிலையில் வகித் தார்.
உளவியல் அறிஞர் ஹேமலதா கலந்து கொண்டு "மனநலமும் உடல் நலமும்" என்ற தலைப்பில் பேசினார். முன்னதாக திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத்துறையில் பணிபுரியும் சமூகப்பணியாளர் சதீஷ் "குழந் தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு"என்ற தலைப்பில் பேசினார். பாடலாசிரியர் ஜோதி தன்னம்பிக்கை பாடல்களைப் பாடி அசத்தி னார். கருத்தரங்கில் ஏராளமான மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தமிழாசிரியர் ஆழ்வைக்கண்ணன் நன்றி கூறி னார்.