திருச்சி மேலக்கல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகர் அல்லித் தெருவை சேர்ந்தவர் ஜான் வின்சென்ட். இவரது மகன் அகஸ்டின் நிக்கோலஸ் (வயது 37) இவர் தனக்கு சொந்தமான காரில் குடும்ப உறுப்பினர்களுடன் காஜா பேட்டை பசுமடம் அருகில் வந்து கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மூன்று நபர்கள் காரை வழிமறித்து கத்திமுனையில் பணத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்து அகஸ்டின் நிக்கோலஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து பிரகதீஸ்வரன், சட்டிஷ் ராஜ் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். மேலும் மாயமான ஒயிட் பிரபுவை தேடுகின்றனர்.