பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் கைது

53பார்த்தது
முத்தரையர் சதய விழாவின் போது திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக இளைஞர்கள் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்தனர்.

இந்த நிலையில்
துறையூர் புலிவலம் சாலையில் நிவாஸ் வயது 19என்ற
இளைஞர் தனது ஆல்ட்டர் செய்யப்பட்ட டிவிஎஸ் 50 பைக்கில் படுத்தவாறு ஒட்டி சாகச பயணத்தில் ஈடுபட்டதுடன் அதை பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியது பல்வேறு தரப்பட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அந்த சம்பவம் நடைபெற்ற இடம் துறையூர் புலிவலம் சாலையில் நடைபெற்றது என்பதும் தெரியவந்தது. உடனடியாக யார் அந்த சாகசத்தில் ஈடுபட்டது என்று விசாரணை செய்ததில் புலிவலம் பகுதியை சேர்ந்த நிவாஸ் வயது 19 என்று இளைஞர் என்பது தெரிய வந்தது. அதன் பின்பு அவர் மீது புலிவலம் போலீசார் 8 பிரிவுகளின் கீழ் வழக்கு செய்தார் இதை அறிந்த நிவாஸ் தலைமறைவாக இருந்து வந்தார் இந்நிலையில் போலீசார் நேற்று புலிவலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட வந்த போது நிவாசை கைது செய்தார்கள் இதை அடுத்து அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி