திருச்சி அரியமங்கலம் பகுதியில் சேர்ந்தவர் தாஜுதீன் இவர் அப்பகுதியில் தள்ளு வண்டியில் பழக்கடை நடத்தி வருகிறார் இந்நிலையில் அரியமங்கலம் தென்றல் நகரைச் சேர்ந்த கேசவமூர்த்தி தினேஷ் பாலகுமார் ஆகிய நால்வரும் தாஜூனிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 2000 பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து தாஜுதீன் திருவரம்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அவரிடம் பணப்பரிப்பில் ஈடுபட்ட நான்கு பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.