ஆட்டோ பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்த மாவட்ட செயலாளர்

65பார்த்தது
ஆட்டோ பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்த மாவட்ட செயலாளர்
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ப. கருப்பையாவை ஆதரித்து திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமையில் பல்வேறு வகையாக பிரச்சார யுத்திகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் ஆட்டோ பிரச்சார வாகனத்தை திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் பிரச்சாரம் வாகனத்திற்கான அனுமதிச்சீட்டை ஆட்டோ டிரைவர்களிடம் வழங்கினார். தொடர்ந்து ஆட்டோவில் அமர்ந்து பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், உங்கிட்ட அதிமுக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி