திருச்சி தெப்ப குளத்தில் தேர்தல் லோகோ வெளியீடு

79பார்த்தது
திருச்சி தெப்ப குளத்தில் தேர்தல் லோகோ வெளியீடு
திருச்சி தெப்ப குளத்தில் ஒளிரும் தேர்தல் லோகோவை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் திறந்து வைத்தார்


வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்ய பல்வேறு விழிப்புணர் நிகழ்ச்சிகள் தேர்தல் ஆணையம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் சார்பாக மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் 100 சதவீதம் வாக்குபதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒளி விளக்கில் தேர்தல் இலட்சினை ( logo) அமைத்து அதை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் மாவட்ட ஆட்சி தலைவரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான பிரதீப் குமார் திறந்து வைத்து பார்வையிட்டார்

தொடர்ந்து தேர்தல் உறுதி மொழியை மாவட்ட ஆட்சியர் வாசிக்க பொதுமக்கள் உறுதி மொழியை எடுத்து கொண்டனர்

இந்நிகழ்ச்சியில் தேர்தல் பார்வையாளர் தினேஷ் குமார், செலவின பார்வையாளர்கள் ஷரம் தீப் சிங்கா, முகேஷ் குமார் பிரம்கானே , திருச்சி மாநகராட்சி காவல் ஆணையர் காமினி, மாநகராட்சி ஆணையர் சரவணன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி