திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் தொகுதி திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய பகுதியில் தி. மு. க. தலைமையிலான இந்திய கூட்டணியின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் துரைவைகோவை ஆதரித்து ஒன்றிய கழக செயலாளர் கங்காதரன் தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் துரை வைகோவிற்கு தீப்பெட்டி சின்னத்தில் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய பகுதிகள் அசூர் சூரியூர், சின்னசூரியூர் எலந்தப்பட்டி, கும்பக்குடி, தேனீர்பட்டி, பொய்கைகுடி, பழங்கனாங்குடி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். ,
மேலும் இதைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில் நமது தமிழக முதல்வர் அவர்கள் நமது தமிழகத்திற்காக , எந்த மாநிலங்களும் இல்லாத வகையில் பல்வேறு புதுமையான திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருவதாக உரையாற்றினார்.