முசிறி நகராட்சியில் அருண் நேரு தீவிர வாக்கு சேகரிப்பு

1040பார்த்தது
முசிறி நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் அருண் நேரு பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்திற்கு முசிறி ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பிரச்சாரத்தை கள்ளர் தெரு , மேல தெரு, துறையூர் ரோடு, பார்வதிபுரம், தா. பேட்டை சாலை, வடுகப்பட்டி, கைகாட்டி ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்குகள் சேகரித்தார். அப்போது அருண்நேரு பேசியதாவது
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பூமி பூஜை அளவில் தான் உள்ளது. இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.. மேலும் நீட் தேர்வை வைத்து வடநாட்டு மாணவர்களை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தான் மருத்துவக் கல்லூரிகளும், இன்ஜினியரிங் கல்லூரிகளும் அதிக அளவில் உள்ளது. இரண்டிலும் வெளி மாநிலத்தவர்களை புகுத்தி வருகிறார்கள். இதை தடுக்க வேண்டும் என்றால் நமக்கான மத்திய அரசு வந்தால் தான் அவை நிறைவேற்றப்படும். பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளரான எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என பேசினார். இந்நிகழ்வில் நகரச் செயலாளர் சிவக்குமார் நகர் மன்ற உறுப்பினர்கள் சுரேஷ், முகேஷ், பாலகுமார், விசுவநாதன், திமுக நகரத் துணைச் செயலாளர் சிவக்குமார், மாணிக்கவாசகம், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி