முசிறியில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பை 65 கிலோ பறிமுதல்

70பார்த்தது
முசிறியில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பை 65 கிலோ பறிமுதல்
முசிறியில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் 65 கிலோ பறிமுதல் - நகராட்சி அலுவலர்கள் அதிரடி நடவடிக்கை


முசிறி நகராட்சிக்குட்பட்ட கடைகள், வணிக வளாகங்கள், உணவு விடுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தக் கூடாது என நகராட்சி நிர்வாகத்தின் கீழ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முசிறி நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேணி உத்தரவின் பேரில் முசிறியில் உள்ள துறையூர் மெயின் ரோடு, சேலம் ரோடு, கைகாட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் சுகாதார ஆய்வாளர் துப்புரவு பணி மேற்பார்வையாளர் களப்பணி உதவியாளர் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் சுமார் 65 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பாலித்தின் பை மற்றும் கப்புகளை தொடர்ந்து வைத்திருந்தால் மேல் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நகராட்சி ஊழியர்கள் தடை செய்யப்பட்ட பைகளை ஆய்வு செய்து பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி