திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த இனாம் ரெட்டியபட்டியை சேர்ந்த ரங்கராஜ் (79). இவரது மனைவி பாப்பான்(75). இந்நிலையில் இன்று காலை சமைத்துக் கொண்டிருந்த போது கேஸ் சிலிண்டரில் இருந்து கேஸ் லீக் ஆகியுள்ளது. அதனை தொடர்ந்து கணவன் மனைவி இருவரும் மாற்று ஏற்பாடு செய்ய நினைக்கும் போதே இருவருக்கும் தீயால் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வெளியே செல்ல நினைக்கும் நேரத்தில் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் ரங்கராஜ் மற்றும் மனைவி ஆகிய இருவருக்கும் கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயனைத்தனர். அதனை தொடர்ந்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார்கள்.