திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரி அருகே உள்ள ஊத்துக்குளி அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று இந்த பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது கலந்து கொண்டு வழங்கினார். இவ்விழாவில் ஒன்றிய பெருந்தலைவர் பழனியாண்டி,
திமுக ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.