பக்கத்து வீட்டாரை கத்தியால் தாக்கிய வாலிபர் கைது.

53பார்த்தது
பக்கத்து வீட்டாரை கத்தியால் தாக்கிய வாலிபர் கைது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நடராஜபுரத்தில் வீட்டின் முன்பு மண் கொட்டியதை அகற்ற சொன்னவர் மீது கத்தியால் தாக்கிய வாலிபர். காவல் நிலையத்தில் நேற்று புகார். போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நடராஜபுரம் கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 54 வயதான அண்ணாதுரை. அதே பகுதியைச் சேர்ந்த பக்கத்து வீட்டுக்காரர் 34 வயதான சத்யராஜ். இவர்களுக்குள் நிலத்தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அண்ணாதுரை வீட்டின் முன்பு சத்யராஜ் எம். சாண்ட் மண்ணை கொட்டி உள்ளார். அப்போது அண்ணாதுரை மண்ணை அகற்றுமாறு சத்யராஜியிடம் கூறியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சத்யராஜ் கத்தியால் அண்ணாதுரையை தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்த அண்ணாதுரை லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து லால்குடி காவல் நிலையத்தில் அண்ணாதுரை கொடுத்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து சத்யராஜ் கைது செய்து லால்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி