லால்குடி அருகே திருமணமான இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

1061பார்த்தது
லால்குடி அருகே திருமணமான இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கண்ணாக்குடி ஊராட்சியில் உள்ள கொளக்குடி கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சந்திரமோகன்.
இவரது மகள் 26 வயதான பாரதி. இவருக்கும் கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுக்கா ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த தனபாலகிருஷ்ணனுக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதத்திற்கு முன்பு பாரதிக்கும் அவரது கணவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டது. இதனால் கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீடான கொளக்குடியில் வசித்து வந்துள்ளார். கணவரை பிரிந்த பாரதி மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 11 ம் தேதி மதியம் 3 மணி அளவில் வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார். இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் பாரதியை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் காணக்கிளியநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.