வீரர் கட்டபொம்மன் சிலைக்கு மரியாதை செலுத்திய கனிமொழி.

55பார்த்தது
வீரர் கட்டபொம்மன் சிலைக்கு மரியாதை செலுத்திய கனிமொழி.
வைப்பார் கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் கட்டபொம்மன் சிலைக்கு மரியாதை செலுத்தி பிரச்சாரத்தை தொடங்கிய கனிமொழி.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வைப்பார் கிராமத்தில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார், அதனைத் தொடர்ந்து குளத்தூர், அரியநாயகிபுரம், கரிசல்குளம், சின்னவன் நாயக்கன்பட்டி, சிவலார்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலும் உதயசூரியன் சின்னத்திற்கு கனிமொழி வாக்கு சேகரித்தார். இந்நிகழ்வில் அமைச்சர் கீதா ஜீவன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன், திமுக ஒன்றிய செயலாளர் அன்புராஜ், சின்ன மாரிமுத்து, ராதாகிருஷ்ணன், மும்மூர்த்தி, செல்வராஜ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினை சேர்ந்த ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி