மீனவர்கள் 5வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை!

3285பார்த்தது
வங்கக் கடலில் மண்ணார் வளைகுடா பகுதி மற்றும் குமரி கடல் பகுதியில் வருகிற ஐந்தாம் தேதி வரை காற்றானது 45 கிலோமீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வரை வீசகூடும் மேலும் அவ்வப்போது சுழற் காற்றானது 65 கிலோ மீட்டர் வரை வீசபகூடும் மேலும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 2000க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் பைபர் படகுகள் ஐந்தாவது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை இதனால் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்நது உள்ளனர் மாவட்ட முழுவதும் மீன் விற்பனை மற்றும் ஏற்றுமதி நடைபெறாததால் பல கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி