பிஜேபியுடன் கூட்டணி கிடையாது; அதிமுக எடப்பாடி பேட்டி!

54பார்த்தது
தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது அன்றாடம் கொலை கொள்ளை என நடந்து வருகிறது என குற்றச்சாட்டு
காவல்துறை ஏவு ஏவல் துறையாக உள்ளது காவல் துறைக்கு முழு அதிகாரத்தை கொடுத்து சட்டம் ஒழுங்கு பாதுகாக்க வேண்டும் இனியாவது எந்த விடியா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

ஆடு மாடு வெட்டுவது போல் சர்வ சாதாரணமாக மனிதர்களை கொலை செய்து வருகின்றனர்.

மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் திருநெல்வேலி காங்கிரஸ் கட்சி ஜெயக்குமார் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் எதற்காக கொலை நடந்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. கொலை செய்வது சராசரமாக ஆகி உள்ளது. மேலும் தமிழகத்தில் போதைப் பொருளால் மாணவர்கள் சீரழிந்து வருகின்றனர் என அவர் தெரிவித்தார். மேலும் பிஜேபியுடன் கூட்டணி கிடையாது எனவும் தெரிவித்தார்

தொடர்புடைய செய்தி