திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் கூட்டம்!

79பார்த்தது
திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் கூட்டம்!
திருச்செந்தூர் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. முகூர்த்தம் தினம் என்பதால் நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடைபெற்றது.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்து செல்கின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.

இந்நிலையில், இன்று ஞாயிறு விடுமுறையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்திருந்தனர். அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4. 30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்து வருகிறது. நாழிக்கிணறு, வள்ளி குகை உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் அலைமோதியது. இன்று முகூர்த்தம் தினம் என்பதால் திருச்செந்தூர் கோயிலில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடைபெற்றது. கோயில் பிரகாரம், கடற்கரை என எங்கு திரும்பினாலும் திருமணக் கோலமாக காட்சி அளித்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி