விரைவில் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டு விழா:

60பார்த்தது
விரைவில் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டு விழா:
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடக்கவிருக்கிறது என்று இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத் கூறினார்.


பி. எஸ். எல். வி. சி-58 ராக்கெட் வெற்றிகரமாக ஏவுதலுக்குப் பிறகு, ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது: இஸ்ரோ தனது முதல் ‘எக்ஸ்-ரே போலரிமீட்டரை' வெற்றிகரமாக விண்ணில் ஏவியதன் மூலம் 2024 புத்தாண்டை வரவேற்றுள்ளது. பி. எஸ். எல். வி. யின் மற்றொரு வெற்றிகரமான பணி நிறைவேற்றப்பட்டுள்ளது.  

தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம் ஏவுதளம் அமைப்பதற்கான வடிவமைப்பு பணிகள் நிறைவடைந்து உள்ளன. விரைவில் அடிக்கல் நாட்டும் பணி நடக்க இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி