கடற்கரையில் படகு குழாம் அமைக்க வேண்டும்: வியாபாரிகள்

85பார்த்தது
கடற்கரையில் படகு குழாம் அமைக்க வேண்டும்: வியாபாரிகள்
திருச்செந்தூா் கடற்கரையில் படகு குழாம் அமைக்க வேண்டும் என செந்தூா் அனைத்து வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சங்கத்தின் 26-ஆவது ஆண்டு விழா மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆண்டு விழாவுக்கு, சங்க தலைவா் அ. துரைசிங் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் செ. சுடலை, ஆ. ஜான்ராஜ், துணைச் செயலா்கள் ப. ரவிச்சந்திரன், தே. ஜான்பால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு வணிகா் சங்க பேரவை மாநில செயல் தலைவா் பா. விநாயகமூா்த்தி, தெற்கு மாவட்ட தலைவா் ஆ. ரவி, பொருளாளா் சா. பொன்ராஜ், செந்தூா் அனைத்து வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவா் மருத்துவா் செ. வெற்றிவேல், சட்ட ஆலோசகா் ஸ்ரீ. கிரீஷ்குமாா், பரமன்குறிச்சி வா்த்தக சங்க பொதுச்செயலா் கா. அப்துல் லத்திப், தலைவா் த. லிங்கம், பொருளாளா் நா. லெட்சுமணன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

திருச்செந்தூரில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுப்பது, திருச்செந்தூா் கடற்கரையில் படகு குழாம் அமைப்பது, சென்னை - திருநெல்வேலி வந்தேபாரத் ரயிலை திருச்செந்தூா் வரை நீட்டிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி