தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் சப் டிவிஷன் சாத்தான்குளம், தட்டார்மடம், மெஞ்ஞானபுரம் ஆகிய காவல் நிலையத்திற்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் சாத்தான்குளத்தில் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் தட்டார்மடம் காவல் நிலையத்தில் ஒரு அறையில் இயங்கியது.
அந்த அறையில் போதிய வசதி இல்லாத காரணத்தினால் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை மாற்றம் செய்து சாத்தான்குளம் காவலர் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் காவல் நிலைய அமைக்கப்பட்டது. அந்த காவல் நிலையத்தில் இரண்டு அறைகள் மட்டுமே உள்ளது. இதனால் மனு கொடுக்க வருகின்ற புகார்தாரர்களை விசாரிக்க இடமின்றி போலீசார் தவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் மனு கொடுக்க வருகின்ற பொழுது அவர்கள் உட்காருவதற்கு போதிய வசதி இல்லாமல் மரத்தடியில் குவிந்து கிடக்கின்றனர். அவர்களுக்கு குடிநீர் வசதி இல்லை. கணவன் மனைவி பிரச்சனை என்பதால் குழந்தைகளுடன் வருகின்ற புகார் தாரர்கள் எந்தவித அடிப்படை வசதியும் இன்றி நிற்கின்றனர். பெண்கள் கழிப்பிடம் இல்லாமல் மிகவும் நெருக்கடியான ஒரு சூழ்நிலை விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.
ஆகவே அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தனியாக ஒரு காவல் நிலையம் அமைத்து போதிய வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று சாத்தான்குளம் ஊர் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.