கனிமொழிக்கு ஆதரவாக முன்னாள் எம். எல். ஏ. வீடு, வீடாக பிரச்சாரம்

575பார்த்தது
கனிமொழிக்கு ஆதரவாக முன்னாள் எம். எல். ஏ. வீடு, வீடாக பிரச்சாரம்
தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி இந்தியா கூட் டணி வேட்பாளர் கனிமொழி கருணாநிதிக்கு ஆதரவாக சாத்தான்குளம் தொகுதி முன்னாள்சட்டமன்ற உறுப்பினர் ராணி வெங்கடேசன் வீடு, வீடாக சென்று பிரச்சாரம் மேற் கொண்டார்.

தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதிஇந்தியாகூட்டணி வேட்பாளராக திமுக சார்பில் போட்டியிடும் கவிஞர் கனிமொழி கருணாநிதிக்கு ஆதரவாக சாத்தான்குளம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராணி வெங்கடேசன் தலைமையில் நாசரேத் அருகிலுள்ள குறிப்பன்கு ளம் சுற்றுவட்டாரப்பகுதியில் உதய சூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு தீவிரபிரச்சாரம் மேற்கொண் டார். அவருடன் தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞரணி பிரிவு வில்லின் பெலிக்ஸ், செட்டிகுளம் ஊராட்சி மன்றத் தலைவர் சுயம்பு லிங்கம், முன்னாள் நாசரேத் நகர காங்கிரஸ் தலைவர் ரவி ராஜா ஆகியோர் உடன் சென்றனர்.

தொடர்புடைய செய்தி