தொற்றுநோய் தடுப்பு பணிகள் தீவிர ஆய்வு!

557பார்த்தது
தொற்றுநோய் தடுப்பு பணிகள் தீவிர ஆய்வு!
தமிழக முதல்வர் ஆணைப்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் ஆலோசனைப்படி கருங்குளம் வட்டாரத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபின் ஏற்படும் நோய்த்தொற்று தடுப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.   அதன் மூலம் கருங்குளம் வட்டார பகுதியில் எந்தவித நோய் பாதிப்புகளும் ஏற்படவில்லை.  


இப்பகுதியில் தொற்று நோய்கள் தடுக்கும் விதமாக கீழ் குறிப்பிடப்பட்ட நடவடிக்கைகளை சுகாதாரத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினமும் சுழற்சி முறையில் மருத்துவ முகாம்கள் வட்டாரம் முழுவதும் நடைபெற்று வருகிறது. கொசு மூலம் பரவும் நோய்களை தடுக்கும் விதமாக புகை மருந்து அடிக்கப்பட்டு வருகிறது.


நீர் மூலமும் பரவும் நோய்களை தடுக்க தினமும் குடிநீர் தொட்டியில் குளோரின் கலந்து சுத்திகரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. வீடுகளுக்கு குடிநீர் குடங்களில் கலக்க குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. எலிகாய்ச்சல் மற்றும் பிற நோய் தொற்றுகளை தடுக்க வீடு தோறும் டாக்ஸி சைக்கிளின் மாத்திரைகள் வழங்கப்படுகிறது.


இந்த நடைமுறைகளை வட்டார மருத்துவ அலுவலர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார துறை பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி