தூத்துக்குடி: பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு

4667பார்த்தது
தூத்துக்குடி: பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு
தூத்துக்குடியில் ரேஷன் கடையில் ரூ. 6000 வாங்கி வந்த பெண்ணிடம் 10 பவுன் தாலி செயினை பறித்து சென்ற  வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்

தூத்துக்குடி மறவன்மடம், ஆர். சி. , கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுக பெருமாள். இவரது மனைவி முத்து செல்வி (46), இவர் நேற்று தூத்துக்குடி திருநெல்வேலி நெடுஞ்சாலை ரோட்டில் ஒரு தனியார் குடோன் அருகில் உள்ள ரேஷன் கடையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 6000 பணம் வாங்கிவிட்டு தனது வீட்டுக்கு சர்வீஸ் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பைக்கில் வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் முத்துச்செல்வி கழுத்தில் கிடந்த 10 பவுன் தாலி தங்க செயினை பறித்துவவிட்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டார்.   உடனடியாக முத்துச்செல்வி கூச்சல் போடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அந்த வாலிபரை விரட்டி சென்றும் பிரிக்க முடியவில்லை. அவர் பறித்துச் சென்ற நகையின் மதிப்பு ரூபாய் 4 லட்சம் ஆகும்.  

இது தொடர்பாக முத்துச்செல்வி புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் அந்த வாலிபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி