அரையாண்டு தேர்வுகள் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று துவக்கம்

1912பார்த்தது
தூத்துக்குடி மழை வெள்ள பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று துவக்கம் தேர்வுகளை எழுதி வரும் பள்ளி மாணவ மாணவியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 18 ஆம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்டது இதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு அப்போது நடைபெற்ற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன

இதை அடுத்து மழை வெள்ள பாதிப்பு மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின்பு நேற்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டன இதைத்தொடர்ந்து விடுபட்ட நான்கு தேர்வுகள் இன்று முதல் துவங்கி நடைபெற்று வருகின்றன காலையில் 11ஆம் வகுப்பு மற்றும் 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கும் மதியம் ஒன்பதாம் வகுப்பு பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

இதில் மாணவர்கள் மற்றும் மாணவியர் ஆர்வமுடன் கலந்து கொண்டு தேர்வுகளை எழுதி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி