பணி நிரந்தரம் கோரி மக்கள் நலப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

72பார்த்தது
பணி நிரந்தரம் கோரி மக்கள் நலப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
பணி நிரந்தரம் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் நலப் பணியாளா்களுக்கு சென்னை உயா்நீதிமன்ற தீா்ப்பின்படி பணி நிரந்தரத்துடன் கூடிய பணி நியமன ஆணை மற்றும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; 9. 11. 2011 முதல் இறப்பு மற்றும் ஓய்வு பெற்ற பணியாளா்களின் குடும்பங்களுக்கு திமுக தோதல் அறிக்கையில் கூறியபடி ரூ. 5 லட்சம் நிவாரணத் தொகையும், வாரிசுகளுக்கு வேலையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். மக்கள் நலப் பணியாளா்கள் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். மேலும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 31 ஆம் தேதி முதல் சென்னையில் தொடா் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாகவும் ஆா்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி