முத்துச்சாமி தீட்சிதர் 249 ஆவது பிறந்தநாள் விழா

70பார்த்தது
முத்துச்சாமி தீட்சிதர் 249 ஆவது பிறந்தநாள் விழா
சங்கீத உலகின் மும்மூர்த்திகளாக போற்றப்படும் தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் ஆகிய மூவரும் 17 ஆம் நூற்றாண்டுகளில் திருவாரூரில் பிறந்தவர்கள் இவர்களில் மூன்றாவதாக அவதரித்த முத்துசுவாமி தீட்சிதர் 1776 ஆம் ஆண்டு பங்குனி மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் திருவாரூர் மேல வட போக்கித் தெருவில் உள்ள ஒரு சிறிய வீட்டில் பிறந்தார். இவரது 249 ஆவது பிறந்தநாள் விழா நேற்றைய தினம் அவர் பிறந்த இல்லத்தில் கொண்டாடப்பட்டது இதனை ஒட்டி வீட்டில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கர்நாடக இசைக் கலைஞர்கள் முத்துசுவாமி தீட்சிதரின் கீர்த்தனைகளை பாடி அவருக்கு இசையஞ்சலி செலுத்தினர்.