திருத்துறைப்பூண்டி: துர்க்கை அம்மன் வீதி உலா - வீடியோ

79பார்த்தது
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் பொன்னேரி கிராமத்தில் எழுந்து அருள் வழங்கி கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஜெய துர்க்கை அம்மன் ஆலய வைகாசி பெருந்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பக்தர்கள் அனைவரும் மாவிளக்கு போட்டு தங்களுடைய நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து இரவு சிறப்பு பூஜை நடைபெற்றது.

சிறப்பு பூஜையில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சுவாமி வீதி உலா காட்சி நடைபெற்றது. அப்போது ஒவ்வொரு வீதிகள் வழியாக அம்மன் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். இந்த நிகழ்வில் கோவில் நிர்வாகிகள், கோவில் பொறுப்பாளர்கள், கிராமவாசிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you