கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது

1084பார்த்தது
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காவல் சரக்கத்திற்குட்பட்ட பகுதியான. ஆலிவலம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த - திருத்துறைப்பூண்டி, கீரக்களூர், காமராஜர் சாலை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சதீஸ் (வயது - 30) என்பவர் கைது. மேலும், அவர் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 250 கிராம் கஞ்சா பறிமுதல்.
சிறப்பாக செயல்பட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த மன்னார்குடி நகர காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. வேலாயுதம் மற்றும் ஆலிவலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் புஷ்பநாதன் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் பாராட்டினார்.

மேலும், பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில் கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் கடுமையாக எச்சரித்தார்.

தொடர்புடைய செய்தி