திருவாரூரில் மழைக்கு வாய்ப்பு

81பார்த்தது
திருவாரூரில் மழைக்கு வாய்ப்பு

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (மே. 10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மழையின் காரணமாக மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி