ஆதீனம் விவகாரம் - பாஜக மாவட்ட தலைவருக்கு முன் ஜாமின் மறுப்பு

8755பார்த்தது
ஆதீனம் விவகாரம் - பாஜக மாவட்ட தலைவருக்கு முன் ஜாமின் மறுப்பு
மயிலாடுதுறை அடுத்த தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோ இருப்பதாக மிரட்டல் விடுத்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக பாஜக மாவட்ட தலைவர் அகோரம் ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில், மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் தலைமறைவாகி விட்டார். இந்நிலையில் பாஜக மாவட்ட தலைவர் அகோரம் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

டேக்ஸ் :