புஷ்ப பல்லக்கில் ராஜகோபால சுவாமி வீதி உலா.

77பார்த்தது
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் பங்குனி திருவிழா 7ஆம் நாள் விழாவில் புஷ்பப் பல்லக்கில் ராஜகோபால சுவாமி எழுந்தருளினார்.

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் பங்குனி பெருவிழா கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 18 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் நேற்று இரவு ராஜகோபாலசுவாமி ராஜா அலங்காரத்தில் பலவண்ண மலர்களால் எழிலுற அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் எழுந்தருளினார்.
ராஜா அலங்கார சேவையில் பக்தர்களுக்கு அருள் அருள் பாலித்தார். பின்னர் யானை வாகன மண்டபத்தில் இருந்து புஷ்ப பல்லுக்கு ஊர்வலம் தொடங்கி பந்தலடி பெரிய கடை வீதி ஆலயத்தின் நான்கு வீதிகள் வழியாக பெரிய கோவிலை சென்றடைந்தது. விழாவை காண மன்னார்குடியின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடினர். இன்று இரவு ரிஷியமுக பர்வத வாகன வீதி உலா நடைபெற உள்ளது. முக்கிய விழாவான வெண்ணைத்தாழி, வெட்ருங்குதிரை விழா வரும் 11ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி