வடுவூர்வடபாதியில் வீட்டிற்குள் லாரி புகுந்து மூத்தட்டி பலி

65பார்த்தது
மன்னார்குடி அருகே வீட்டிற்குள் லாரி புகுந்த விபத்தில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம்
மன்னார்குடி அடுத்த வடுவூர் தென்பாதி கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு என்பவரின் மனைவி 60வயதான மூதாட்டி வீரம்மாள். இன்று காலை வீட்டில் இருந்துள்ளார் அப்போது வடுவூரிலிருந்து கதிர் அறுக்கும் இயந்திரத்தை ஏற்றுக் கொண்டு ஒரத்தநாடு நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. துரையரசன் என்பவர் லாரியை ஓட்டி வந்துள்ளார். வடுவூர் அடுத்த வடுவூர் தென்பாதி எனும் இடத்தில் லாரி வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த குடிசை வீட்டுக்குள் லாரி புகுந்து விபத்துப்புள்ளானது.

இந்த விபத்தில் வீட்டுக்குள் இருந்த மூதாட்டி வீரம்மாள் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் விபத்துக்கான காரணம் குறித்து வடுவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி