திருவள்ளூர்: போலீசிடம் சிக்கிய இருவர்..!

5335பார்த்தது
திருவள்ளூர்: போலீசிடம் சிக்கிய இருவர்..!
தண்டையார்பேட்டை, சேனியம்மன் கோவில் தெரு சந்திப்பில், போதை மாத்திரைகள் புழக்கம் அதிகம் இருப்பதால், வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சக்திவேல் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், தனிப்படை உதவி ஆய்வாளர் பிரவீன் குமார் தலைமையிலான போலீசார், அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு, சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். முன்னுக்கு பின், முரணாக பதிலளித்தால், அவரை சோதனையிட்டதில், போதை தரக் கூடிய, நைட்ரோவிட் மாத்திரைகள் அதிகளவில் இருந்துள்ளது. தொடர்புடைய, தண்டையார்பேட்டை, சிவாஜி நகரைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன், 22, என்பவரை கைது செய்த போலீசார், 621 நைட்ரோவிட் மாத்திரை கள் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில், மணலி, சி. பி. சி. எல். , நகரைச் சேர்ந்த ஸ்டீபன், 23, என்பவர், இந்தியா மார்ட் வலைதளம் வழியாக, சீனிவாசன் பெயரில், போதை மாத்திரைகளை ஆர்டர் செய்து வாங்கி கொடுத்தது தெரியவந்தது. அவரையும் கைது செய்த போலீசார், விசாரணைக்கு பின், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.