திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுடன் இணைந்த திருவாலங்காடு அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது நடராஜப் பெருமானின் 5 சபைகளில் முதல் சபையான இரத்தின சபையாக திகழ்கிறது. இக்கோயிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வந்தன. இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 16-ஆம் தேதி கிராம தேவதை அனுக்ஞையும், ஸ்ரீ பத்ரகாளியம்மனுக்கு அபிஷேகமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 17ஆம் தேதி காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை மகா சங்கல்பம், கணபதி ஹோமம் நவகிரக ஹோமம் நடைபெற்றது. மாலை வாஸ்து சாந்தி பிரவேச பலி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 18 ஆம் தேதி காலை லட்சுமி ஹோமம் மூர்த்தி ஹோமம் சாந்தி ஹோமம் பரிகார சுவாமிகள் அஷ்டபந்தனம் சாத்துதல் ஆரம்பமானது. மாலை கோ பூஜை, தன பூஜை, பிரம்மச்சாரி பூஜை, கன்னியா பூஜை, சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, வடுக பூஜை, தீர்த்த சங்கரகணம் யாகசாலை நிர்மானம், மூலவர் அம்பாள் அஷ்டபந்தனம் சாத்துதல், கா, காரைக்கால் அம்மையார் ரத்தின சபைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து இருபதாம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜை விசேஷ ஹோமங்கள் நடைபெற்றது மாலை மூன்றாம் காலையாக பூஜையும் நாடி சந்தானம் நிகழ்ச்சியும் தீபாரதனையும் நடைபெற்றது.