திருவள்ளூர்: மர்மமான முறையில் வீட்டில் பயங்கர தீ; வீடியோ

71பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வரும் வெற்றிநாதன் என்பவரின் வீட்டில் அவரது உறவினர் முருகேசன் (39) (வெல்டர்) அவரது மனைவி ராமி அவர்களின் இரு குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மாலை முருகேசன் மனைவி ராமி அவரது மகளை பள்ளியிலிருந்து அழைத்து வர வீட்டைப் பூட்டிக்கொண்டு சென்றபோது வீட்டிலிருந்து கரும்புகை புழுங்கிக்கொண்டிருந்ததை அக்கம்பக்கத்தினர் பார்த்து உடனடியாக திருத்தணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

இதற்குள் தளம்போட்ட வீடு முழுவதும் தீ பரவியது. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுப்படுத்தினர். தீ விபத்தில் வீட்டு உபயோகப் பொருட்கள், முக்கிய ஆவணங்கள் மற்றும் அவரது உறவினருக்கு திருமணத்தின்போது வழங்கிய சீர்வரிசையாக வழங்கப்பட்ட பொருட்கள் வைக்க இடவசதியின்றி முருகேசன் வீட்டில் வைத்திருந்த அனைத்து சீர்வரிசைப் பொருட்களும் எரிந்து நாசமானது. வீடு எரிந்து நாசமான சம்பவத்தில் மர்மமான முறையில் வீட்டில் தீப்பற்றிக்கொண்ட சம்பவம் தொடர்பாக திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி