குட்கா கடத்திய ஒடிசா வாலிபர் கைது

83பார்த்தது
குட்கா கடத்திய ஒடிசா வாலிபர் கைது
ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி வழியாக சென்னை, வேலுார் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பதியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த தனியார் பேருந்தில் போலீசார் சோதனை செய்ததில், ஒரு இளைஞர் பையில், 5 கிலோ குட்கா பொருட்கள் மற்றும், 15 மதுபாட்டில்கள் இருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஒடிசாவை சேர்ந்த சுரேந்திர கார்செல், 29 என தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி