பேருந்து நிழற்குடை வேலஞ்சேரியில் சேதம்.

85பார்த்தது
பேருந்து நிழற்குடை வேலஞ்சேரியில் சேதம்.
திருத்தணி-நாகலாபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் வேலஞ்சேரி பேருந்து நிறுத்தம் உள்ளன.

இங்கிருந்து பொது மக்கள் மற்றும் மாணவர்கள் திருத்தணி, நாகலாபுரம் மார்க்கத்திற்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் சென்று வருகின்றனர். பயணியர் வசதிக்காக, கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன் நிழற்குடை அமைக்கப்பட்டது.

இதை முறையாக ஊராட்சி நிர்வாகம் பராமரிக்காததால் தற்போது நிழற்குடை விரிசல் மற்றும் சிமென்ட் தளம் பெயர்ந்து சேதம் அடைந்துள்ளது. இதனால் பயணியர் பேருந்து நிழற்குடைக்கு செல்வதை தவிர்க்கின்றனர். இதனால் தற்போது பேருந்து நிழற்குடை 'குடி'மகன்கள் கூடாரமாக மாறியுள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் பழுதடைந்த பேருந்து நிழற்குடை அகற்றி அதே இடத்தில் புதிய நிழற்குடை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி