ஆயில்குடோனில் தீ விபத்து ரூ. 1கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

66பார்த்தது
ஆயில்குடோனில் தீ விபத்து ரூ. 1கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்
பூந்தமல்லி அடுத்த கோளப்பன்சேரி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான குடோன் உள்ளது. இங்கு ஆயில் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் தேக்கி வைக்கப்பட்டு, வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு திடீரென இந்த குடோனில் இருந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனைக் கண்டதும் அங்கு தங்கி இருந்த ஊழியர்கள் அலறி அடித்தபடி வெளியே ஓடி வந்துள்ளனர். பின்னர், இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், பூந்தமல்லியில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, தீயானது அடுத்தடுத்து பரவிய நிலையில் கொழுந்துவிட்டு எரிந்தது. எனவே, கூடுதலாக கிண்டி, அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதன் பின்னர் பல மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு தீயானது அணைக்கப்பட்டது. ஆயில் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வைத்திருந்த குடோன்கள் தீப்பிடித்து எரிந்ததால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி இருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி