திருவொற்றியூர்: அதிமுக நிர்வாகிகள் இருவர் தலைமறைவு

1538பார்த்தது
திருவொற்றியூர்: அதிமுக நிர்வாகிகள் இருவர் தலைமறைவு
வடசென்னை நாடாளுமன்ற வேட்பாளர் ராயபுரம் ஆர். மனோவை ஆதரித்து திருவொற்றியூர் சாத்துமாநகர் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்புதெரு முனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை பகுதி செயலாளர் அஜாக்ஸ் எஸ். பரமசிவம் (வயது. 62) ஏற்பாடு செய்திருந்தார். அதற்கான அனுமதியும் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் பெற்றிருந்தார்.

இந்தக் கூட்டத்திற்கு அழைப்பில்லாமல் திடீரென வருகை தந்த மாவட்ட அவைத் தலைவர் பி.டி.சி. ராஜேந்திரன்(வயது. 68) மைக்கை பிடித்து பேசும்போது முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவருடைய தந்தை முத்துவேலர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குடும்பத்தாரை கடுமையான கொச்சையான சொற்களால் ஆவேசமாக பேசியதோடு அல்லாமல் கலைஞரின்
தந்தை முத்துவேலர் செய்த குலத்தொழியையும் கடுமையாக விமர்சித்தார்.

அங்கிருந்த திமுக மாவட்ட பிரதிநிதி கார்த்திகேயன் வட்டத் துணைச் செயலாளர் முத்துராஜ், முன்னாள் பகுதி பிரதிநிதி ஆனந்தன், முன்னாள் வட்ட பிரதிநிதிகள் கருணாநிதி, ராமராஜன் ஆகியோர் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் ராஜேந்திரன் மீது புகார் தந்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன் கூட்டத்தை ஏற்பாடு செய்த பகுதிசெயலாளர் பரமசிவம் ஆகியோர் மீது ஐந்துபிரிவுகளில் வழக்கு பதிந்து எப். ஐ. ஆர். பதிவு செய்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த அவர்கள் இருவரும் தலைமறைவானர்கள்.