செங்கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் குழந்தை தொழிலாளர்கள்

66பார்த்தது
செங்கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் குழந்தை தொழிலாளர்கள்
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட செங்கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் அதே பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு குறிப்பிட்ட செங்கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் உரிமையாளர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட குடும்பங்களாக பள்ளி குழந்தைகள் உட்பட 100-க்கும் மேற்பட்டவர்களை அழைத்து வந்து இங்கு தங்கவைத்து செங்கற்கள் தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுத்துகின்றனர் என கூறப்படுகிறது.

அதேபோல் இந்த செங்கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வந்து தங்கி பணியாற்றும் ஒடிசா மாநில கூலி தொழிலாளர்களின் குழந்தைகளின் எதிர்காலம் தற்போது கேள்விக் குறியாக அமைந்துள்ளது. மேலும் தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்தில் பணி செய்து தாங்கள் சொந்த மாநிலத்திற்கு செல்லும் வரை கல்வி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் இந்த கூலி தொழிலாளர்களுக்கு எட்டாகனியாக கூடுதல் லாபம் பெரும் தொழிற்சாலையின் உரிமையாளர் அமைத்து வைத்துள்ளதாக தெரியப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட செங்கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் அதன் உரிமையாளர் மீது உடனடியாக மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

டேக்ஸ் :